Drunkard and the Guru - In Tamil




ஒரு குறும்புக்கார ஆசாமி ஒரு
மகானிடம் சென்று கேட்டான்:

"நான் திராட்சை சாப்பிடலாமா?''

மகான் சொன்னார்: "ஓ... தாராளமா''

"அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தலாமா?''

"ஓ.. பயன்படுத்தலாமே?''

"புளிப்புச் சுவைக்காக கொஞ்சம்
வினிகர் சேர்த்துக் கொள்ளலாமா?''

"அதிலென்ன சந்தேகம்?''

"அப்படீன்னா இதுவெல்லாம்
சேர்ந்ததுதான் மது. அதைக் குடிப்பது
மட்டும் தப்பு என்று
சொல்கிறார்களே?''

மகான் யோசித்தார். குறும்புக்கார
ஆசாமியிடம் கேட்டார்:

"இங்க பாருப்பா... உன் தலை மேலே
கொஞ்சம் மண் அள்ளிப் போட்டா
உனக்குக் காயம் ஏற்படுமா?''

"அதெப்படி ஏற்படும்?''

"தண்ணீர் ஊற்றினால்?''

"தண்ணீர் ஊற்றினால் எப்படி காயம்
ஏற்படும்?''

"மண்ணையும் தண்ணீரையும் கலந்து
சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில்
போட்டால்?''

"காயம் ஏற்படும்''

"நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்''
என்றார் மகான்..

Comments

Popular posts from this blog

Meaning of Sloka: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ....

Aathichudi single line verses by Tamil Poet Avvaiyar and their translation

அர்த்த சாஸ்திரம் சொல்லும் நல்விஷயங்கள்