What is Karma? - In Tamil

ஒருவன் செய்யும் நன்மைக்கும் தீமைக்கும் தான் கர்மா என்றால் பலருக்கு உபகாரமாக இருக்கும் எனக்கு ஏன் கஷ்டம் என்பர்

மூதாதையர்கள் சொல்வர் கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு போடாதே என்று

பிள்ளையாருக்கு தெரியும் தேங்காய் யாருடையது என்று

பகவான் என்றும் தன் கணக்கை தவறாக செய்யமாட்டான் 

நம்மில் அனைவருக்கும் அடிக்கடி ஒரு எண்ணம் தோன்றும்

நம் விஷயத்தில் கடவுள் கொஞ்சம் பாரபட்சமாய் விதித்து விட்டாரோ என்ற வருத்தம் ஏற்படும்

நாம் எத்தனையோ பேருக்கு எத்தனை நன்மைகள் செய்திருக்கிறோம்

பின் நமக்கு ஏன் இப்படி என்று வருத்தப்படுவோம்

அப்போது வீட்டு பெரியவர்கள் நமக்கு ஆறுதலாய் அவன் கணக்கு யாருக்குத் தெரியும் நமக்கு புரியவில்லை என்பதால் அது தவறு என்று நினைப்பது சரியல்ல என்பார்கள்

இந்த வாதம் எனக்கும் பலவருடங்கள் புரியாமல் இருந்த்து

புரிந்தது ஒரு கதையால் 

உங்களுக்கும் அந்த கதை

ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போகர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர்

இரவு நேரம் பெருத்த மழை வேறு

அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார்

வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார்

அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள்

சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர்

முன்னவர் இருவரில்  ஒருவர் சொன்னார்

என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார்

இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர் ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள்

இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார் மூன்றாம் நபர் 

இதற்கு நான் ஒரு வழி சொல்ல்கிறேன்(உணவு தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்)

நீங்கள் உங்கள் ரொட்டிகளை ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள்

இப்ப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும் நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார்

இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்

ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்

பொழுது விடிந்தது மழையும் நின்றது மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும் போது உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி எட்டு தங்க நாணய்ங்களை கொடுத்து நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார் 

மூன்று ரொட்டிகளை கொடுதவர் அந்த காசுகளை சமமாகப்பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக் கொள்வோம் என்றார் மற்றொருவர் இதற்கு சம்மதிக்கவில்லை

மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்

ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார் (5:3)

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும் நான் பங்கிட சம்மதித்தேன் 

நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது 

அதனால் என் செய்கையே பாராட்ட தக்கது என்றாலும் பரவாயில்ல சமமாகவே பங்கிடுவோம் என்றார்

சுமுகமான முடிவு எட்டாத்தால் விஷயம் அரசனின் சபைக்கு சென்றது

அரசனுக்கு யார் சொல்வது சரி என்று புரிபடவில்லை

நாளை தீர்ப்பு சொல்லதாய் அறிவித்து அரண்மனைக்கு சென்றான்

இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது

கனவில் கடவுள் காட்சி அளித்து சொன்ன தீர்பும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

அடுத்த் நாள் சபை கூடியது

மன்னன் இருவரையும் அழைத்தான்

மூன்று ரொட்டிகளை கொடுத்தவனுக்கு ஒரு காசும் ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்

ஒரு காசு வழங்கப்பட்டவர் மன்னா இது அநியாயம் அவரே எனக்கு மூன்று கொடுத்தார்

அரசர் சொன்னார் நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள் அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது

அவன் தந்தது பதினைந்து துண்டுகள் அவனுக்கும் எட்டு துண்டுகள் கிடைத்தது ஆக நீ  தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி

அதற்கு இதுவே அதிகம் என்றார்

ஆம் கடவுளின் கணக்கு இவ்வளவு துல்லியமாக இருக்கும்

இழந்ததை எல்லாம் தருவது அல்ல அவன் கணக்கு

எது உனக்கு புண்ணியம் சேர்க்குமோ அதுதான் உனக்கு என்பது அவன் கணக்கு

ஏனென்றால் அவனது கணக்கு ஏட்டு கணக்கு அல்ல தரும கணக்கு

என்ன அன்பர்களே கடவுள் கணக்கு தவறாது!!!  

 தர்மமோ அல்லது புண்யகாரியம் செய்தால் கடவுள் யாருக்கு பலனை கொடுக்க வேண்டுமோ அவருக்கு சரியாக கொடுத்து விடுவான்

Comments

Popular posts from this blog

Meaning of Sloka: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ....

Aathichudi single line verses by Tamil Poet Avvaiyar and their translation

அர்த்த சாஸ்திரம் சொல்லும் நல்விஷயங்கள்