10 செகண்ட் கதைகள்


             *ஸீட்*
       தன் மகன், அரசுக் கல்லூரியில் இலவச ஸீட்  வாங்குவதற்காக, தனியார் பள்ளியில் அதிகப் பணம் கொடுத்து சேர்த்தார் தந்தை!
        =======
           ===============

                  *திருட்டு*
         "பென்சில் திருடினதுக்கு மிஸ் அடிச்சிட்டாங்க" எனக் கேவிக்கேவி அழுத மகளிடம், "திருடுறது தப்பு...'பென்சில் வேணும்'னு அப்பாகிட்ட கேட்டிருந்தா ஆபீஸில் இருந்து கொண்டு வந்திருப்பேன்ல!" என்றார் அப்பா.
          ===============

             *பணம்*
        பள்ளிக் கட்டணம் கட்டாததால், மாணவியை வகுப்பறை வாசலில் நிற்கவைத்தாள்....இரண்டு மாதமாக சம்பளம் வாங்காத ஆசிரியை!
            =============

         *பழ(ங்)கதை*                "தம்பிதானே....விட்டுக்கொடுப்பா" என மகனிடம் செல்பேசியில் சொல்லிக் கொண்டிருந்தார் தன் சகோதரன் மீது தகராறு என காவல்நிலையத்தில் நின்றிருந்த தந்தை!
             ===============

               *அக்கறை*
         கோயில் திருவிழாவில் தன் குழந்தையைத் தவறவிட்டு 'காணவில்லை' என அழுதபடி தேடிக்கொண்டிருந்தவளின் இடது கையில் பத்திரமாக இருந்தது கைபேசி!
          ===============

               *விதி*
        "துப்பாக்கியில் சைலன்ஸர் இருந்தும் எப்படி மாட்டிக்கிட்ட?" என்றான் சக கைதி. "செத்தவன் கத்திட்டானே!" என்று சோகமாகச் சொன்னான் கொலைகாரன்!
            =============

Comments

Popular posts from this blog

Meaning of Sloka: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ....

Aathichudi single line verses by Tamil Poet Avvaiyar and their translation

அர்த்த சாஸ்திரம் சொல்லும் நல்விஷயங்கள்