தமிழ் எண்கள் கவனம் வைத்து கொள்வது எப்படி?

ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியின் தமிழ் புத்தகத்தில்.
அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது.
எனக்கு, அது தெரியாது என்பதால், அதை அவளிடமே  கேட்டேன்.
உடனே அவள்.,
“1 2 3 4 5 6 7 8 9 0
என்ற எண்ணுக்கு
முறையே, 
க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, ய′ 
என்றாள்
“இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?’ எனக் கேட்டேன்.
அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி, வாக்கியமாக்கி தமிழ் ஆசிரியை சொல்லிக் கொடுத்ததாக கூறினாள்.
அந்த வாக்கியம்..,

“க’ டுகு,                    1

“உ’ ளுந்து,               2

“ங’ னைச்சு,.            3

 “ச’  மைச்சு,              4

“ரு’ சிச்சு,                   5

“சா’ ப்பிட்டேன்,.       6

“எ’ ன, “.                     7

அ’ வன்,                     8

“கூ’ றினான்;           9

“ய’  என்றேன்      0

மறக்காமல் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும்👏

Comments

Popular posts from this blog

Meaning of Sloka: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ....

Aathichudi single line verses by Tamil Poet Avvaiyar and their translation

அர்த்த சாஸ்திரம் சொல்லும் நல்விஷயங்கள்