யார் ஏழை? யார் பணக்காரர்?

யார் ஏழை  ❓❓❓

🔰ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..❗

🔰சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண் 
வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..❗

♻இதில் யார் பணக்காரர்...❓

🔰3'ஸ்டார் 🏬ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீட்டு 6 மாத குழந்தையின் அம்மா,

🏬ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் 🍼வேண்டும் என்று கேட்கிறார்,

அதற்கு அந்த மேலாளர் 🍼பாலுக்கு நீங்கள் தணியாக 💶பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,
பணக்கார அம்மாவும் 💶பணத்தை செலுத்தி 🍼பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்...❗

🔰ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு 🏬ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ,
ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் 🍼பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு 🍼பால் எவ்வளவு
என்று டீ கடைக்காரரிடம் கேட்க,

டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் 💶காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்...❗

பணம்💶 உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ......❗❗
அதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்....❗❗

இந்த உலகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.....
நம் 👀கண்களுக்கு தென்படவில்லை என்றாலும் பரவாயில்லை நாம் அவர்களில் ஒருவராக இருக்க முயற்சி செய்வோம்.....❗❗

தொடக்கம் நாமாக இருப்போமே...❗❗
 பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது ⚽கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது. மற்றொன்று உதைக்கப் படுகின்றது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது. ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.

சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்.

Comments

Popular posts from this blog

Meaning of Sloka: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ....

Aathichudi single line verses by Tamil Poet Avvaiyar and their translation

அர்த்த சாஸ்திரம் சொல்லும் நல்விஷயங்கள்