ராகு கேதுவுக்கு ஏன் வாரத்தில் பங்கு இல்லை?

The following is a Tamil Transcript (in First Person) of a discussion between a child and a knowledgeable person.


இன்று  அடியேனது நண்பர் வீட்டில் காலை திருவாராதனம் கண்டு வந்த போது நண்பனின் 9 வயது மகன் 

மாமா நவகிரஹம் ஒன்பது உள்ளது ஆனால் வாரம் என்பது ஏழு நாட்களே உள்ளது மற்ற இரண்டு கிரஹங்களுக்கும் கிழமை கிடையாதா இது பாரபட்சம் இல்லையா என கேட்டான் 

அவனை ஆசீர்வதித்து மகனே நல்ல கேள்வி பகவான் உனக்கு எல்லா நலனும் வழங்கட்டும் என கூறிய வாரே

எங்கே ஒன்பது கிரஹம் பெயர்களை கூறு என்றேன் 

சூரியன் சந்திரன் அங்காரகன் புதன் குரு சுக்கிரன் சனி ராகு கேது 

வாரத்தின் நாட்கள் கூறு என்றேன்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி என்றான் 

இப்போ உன் கேள்வி ராகு கேதுவுக்கு ஏன் வாரத்தில் பங்கு இல்லை என்பதும் அது பாரபட்சம் என்பதும் தானே என்றேன்

ஆமாம் மாமா என்றான் 

மகனே பகவான் எந்த காரணத்தை கொண்டும் யாருக்கும் பாரபட்சம் செய்யமாட்டான் அதாவது அவன் பகவானை விரும்பினாலும் வெறுத்தாலும் பாரபட்சம் காட்டவே மாட்டான் 

ஹிரண்யனுக்கு பல சந்தர்ப்பங்களை கொடுத்தான் பிரஹலாதனுக்கு அவன் செய்த பல கொடுமைகளில் இருந்து காப்பாற்றி உணர்த்தினான் ஆனாலும் புரியாமல் தூணை காட்டி கேட்டு இங்கு இல்லையேல் உன் உயிரை எடுப்பேன் என கூறியதால் பகவான் தன் பக்தன் பிரஹலாதன் உயிரை காக்க தூணிலிருந்து தோன்றி அரக்கன் ஹிரண்யன் உயிரை எடுத்தான் 

இராமாயணத்தில் இராவணனுக்கு அவன் எல்லா நண்பர்களும் ஆயுதங்களும் இழந்து தனியாக நின்றபோதும் அவனுக்கு ஒரு நாள் சந்தர்பம் கொடுத்தார் அதாவது இன்று போய் நாளை வா என எதற்காக சண்டை போடுவதற்க்கா இல்லை சீதையை கொண்டுவந்து ஒப்படைக்க அதன் மூலம் அவனுக்கு இரக்கம் காட்ட ஆனால் அதை இராவணன் செய்யாத்தால் பகவானால் கொல்லப்பட்டான் 

அது போல் தான் பகவான் தேவர்களுக்கும் கிரஹங்களுக்கும் பாற்கடலை கடைந்து வந்த அமுதத்தை பகிர்ந்து அளிக்கும் போது இடையில் புகுந்த அரக்கரன் அதை பெற   சந்திரன் அதை காட்டி கொடுக்க பகவான் அசுரன் தலையை துண்டித்து விட அமுதம் பெற்ற அவனுக்கு அழிவு இல்லாததால் அவர்களை இரண்டு கிரஹமாக ஆக்கி இராகு கேது என பெயர் வைத்து அவர்களுக்கு உரியதாக ராகுகாலம் குளிகைகாலம் என இரண்டு காலத்தை கொடுத்துள்ளார்

மனிதர்கள் இந்த இராகு காலத்தில் எந்த வேலையை செய்தாலும் அது சிரமத்தின் பேரில் தான் நடைபெறும் நற்காரியங்கள் கூடுமானவரை செய்யக்கூடாது அதேபோல் குளிகனில் கெட்ட காரியங்கள்  அபர காரியங்கள் செய்ய கூடாது என கூறி அருளினார்

மாமா அது தெரியும் ஆனால் ஏன் மாமா வாரநாட்களில் அவர்களை சேர்க்கவில்லை என்றான் 

அவனிடம் உன்னிடம் ஒரு பாக்கெட் பிஸ்கட் தான் உள்ளது அந்த பாக்கெட் பிஸ்கட்டை நீயும் உன் தங்கையும் பிரித்து சாப்பிட எண்ணும் போது இடையில் உங்கள் நண்பர் இருவர் வந்தால் என்ன செய்வான்  என்றேன் 

அந்த பிஸ்கட் பாக்கெட்டின் உள்ளதை கூட வந்தவர்களுக்கும் பிரித்து கொடுத்து சாப்பிடுவோம் என்றான் 

ஏன் அவங்களுக்கு தனியாக ஒன்றை கொடுக்கலாமே என்றதும் 

எங்கிட்ட ஒரு பாக்கெட் தானே இருக்கு அப்போ அதிலிருந்து தானே கொடுப்பேன் என்றான் 

சரியாக சொன்னாய் அதே போல்தான் வாரத்துக்கு நாள் ஏழு என ஏழு கிரகஹங்களுக்கும் ஒன்றாக பகவான் உண்டாக்கி ஒவ்வொரு நாளுக்கும் இருபத்தினான்கு மணி நேரம் என ஏற்படுத்தி நடத்திவரும் போது இடையில் இரு கிரஹங்கள் வருவதால் என்ன செய்ய என யோசித்த பகவான்

அனைத்து கிரஹங்களுக்கும் வேலை நேரம் சமமாக இருக்கவேண்டும் அதே நேரம் வார நாட்களையும் கூடுதலாக வருமாறு செய்ய கூடாது என்ற எண்ணத்தில் 

ஏழு கிரஹங்களையும் அழைத்து அவர்கள் ஒவ்வொருவர் நேரத்திலும் மூன்று மணிநேரத்தை எடுத்துக்கொண்டான்

இப்போ சொல்லு ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் 

இருபத்திநான்கு மணி நேரம் மாமா

அதில் மூணு மணி நேரத்தை பகவானுக்கு கொடுத்தது போக மீதி எவ்வளவு உள்ளது 

இருபத்து ஒரு மணி நேரம் மாமா

இப்போ ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் மாதிரி ஏழு நாட்களுக்கும் எடுத்தால் எவ்வளவு 

இருப்பதொரு மணி நேரம் மாமா

இப்போ பெருமாள் கையில் எவ்வளவு மணி நேரம் உள்ளது 

ஏழு பெருக்கல் மூணு இருப்பத்தியோரு மணி நேரம் 

இதை தான் தன்னால் தலை துண்டிக்கப்பட்டு உடலால் ஒரு கிரஹமாகவும் தலையால் ஒரு கிரஹமாகவும் ஆன ராகு கேதுவுக்கு பிரித்து கொடுத்தார்

அதுவும் எப்படி 

ஒவ்வொரு கிழமையிலும் ராகு காலமாக ஒன்றரை மணி நேரமும் குளிகை காலமாக ஒன்றரை மணி நேரமுமாக

இப்போ சொல்லு உன்னிடம் இருந்த ஒரு பாக்கெட் பிஸ்கட்டை இடையில் வந்தவருக்கு பகிர்ந்தளித்த மாதிரி 

ஏற்கனவே இருந்த ஏழு நாட்களையும் இருபத்தி நான்கு மணி நேரத்தையும் சமமாக பகிர்ந்தார்

ராகுவும் கேதுவும் ஒரே உடலின் இரண்டு அங்கம் ஆனதால் அந்த இருபத்தொரு மணி நேரத்தை இரண்டாக பிரித்து ஆளுக்கு பத்தரை மணிநேரம் அதாவது ஒவ்வொரு நாளிலும். ஒன்றரை மணி நேரம் ஏழு நாட்களில் ஏழு பெருக்கல் ஒன்றரை அதாவது பத்தரை மணிநேரமாக கொடுத்துள்ளார்

இப்போ சொல்லு பகவான் பாரபட்சம் காட்டியுள்ளானா

இல்லை மாமா ஏழு நாட்களை கொண்ட வாரத்தில் ஒவ்வொருவரிடமும் இருந்து மூணு மணி நேரத்தை குறைத்து வேலை நேரத்தை 21 மணி நேரமாக குறைத்து அதையே இரண்டு பங்கான அசுரனுக்க பாதி பாதியாக அதாவது பத்தரை மணியாக அந்த இருபத்தொரு மணி நேரத்தை பிரித்து கொடுத்துள்ளான் அப்படி தானே என்றான்  

அப்படிதான் மகனே பகவான். யாரையும் எந்த காரணத்திற்காகவும் வஞ்சிக்கவோ பாரபட்சம் காட்டவா மாட்டான் நல்லவர்களை அரவனைப்பதும் துஷ்டனுக்கு சந்தர்பம் கொடுத்து திருத்தவும் சில சோதனைகளை செய்வான் அப்போதும் செய்பவன் அவனே என அவனிடம் நாம் சரணடைந்து விட்டால் போதும் அவன் நம்மை ஆட்கொண்ட விடுவான் 

பகவான் யாரையும் நம்மைபோல் பாரபட்சமாக நடத்த மாட்டான் என்றதும் 

அவனது தாயார் அவன் இவ்வளவு நாளாக அவன் அப்பாவை இந்த கேள் வி கேட்டு தொந்தரவு செய்தான் இன்று விடை கிடைத்தது இனி அவன் அப்பாவை தொந்தரவு செய்ய மாட்டான் என்றவாரே பகவான் கண்டருளிய ஜீரத்தை கொடுக்க அதை ஸ்வீகரித்த அடியேனை கண்டு 

ஜெய் ஶ்ரீராம் என்றவாறே மகிழ்வுடன் வெளியே ஓடினான் 

அடியேனும் பதிலுரைத்தேன்

ஜெய் ஶ்ரீராம் என 

ஜெய் ஶ்ரீராம்!! 

Comments

Popular posts from this blog

Meaning of Sloka: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ....

Aathichudi single line verses by Tamil Poet Avvaiyar and their translation

அர்த்த சாஸ்திரம் சொல்லும் நல்விஷயங்கள்