Some Mokkais to begin your Monday on a happy note

அவர்: ஏன்டா உங்க அப்பன் பேர  பிரிஜ்ஜூக்குள்ள எழுதி வச்ச??

இவன்: என் பெயர் கெட்ராம பாத்துக்கன்னு அவர்தான் சொன்னாரு..

____________________________________________________

பேராசிரியர்: சாப்ட்வேர்னா என்னா, ஹார்டுவேர்னா என்னா?

இவன்: செடியில உள்ளது சாப்ட்வேரு.. மரத்துல உள்ளது ஹார்டுவேரு.

____________________________________________________

அவர்: ஜிம்முக்கு போற பசங்கள ஈசியா கண்டுபிடிச்சிடலாம்.

இவர்: எப்படி.?

அவர்: ரெண்டு கைலயும் சாம்பார் வாளிய தூக்கிட்டு போறமாதிரி நடப்பானுங்க.
____________________________________________________

தாத்தா : அந்த காலத்துல உன் வயசுல நான் கடைக்கு இரண்டு ரூபாய் 
எடுத்துட்டு போனா  வீட்டுக்கு வரும்போது பால், பழம், ரொட்டி, மிட்டாய், 
சோப்பு, பவுடர் எல்லாம் கொண்டு வருவேன்.. தெரியுமா ?

பேரன் : இப்ப அப்படியெல்லாம் முடியாது தாத்தா.. எல்லா கடையிலயும் 
நிறைய C C TV காமரா வச்சுருக்காங்க...!
____________________________________________________

டாக்டர்: இந்த மருந்த காலைல வெறும் வயத்துல சாப்டுங்க..

வந்தவர்: ஒரு பனியன்கூட போட்ருக்ககூடாதா டாக்டர்.?
____________________________________________________

Comments

Popular posts from this blog

Meaning of Sloka: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ....

Aathichudi single line verses by Tamil Poet Avvaiyar and their translation

அர்த்த சாஸ்திரம் சொல்லும் நல்விஷயங்கள்